மதுரை மாநகராட்சி 88வது வார்டு அனுப்பானடியில் ரூ.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா.

Published Date: July 17, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி 88 வார்டு அனுப்பானடி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 95 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கலெக்டர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, பூமிநாதன், எம்.எல். ஏ.,துனை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் சோலைராஜா, பிரேமா, முத்துமாரி ஜெயக்குமார், செல்வம், திமுக பகுதி செயலாளர் சிவகுமார், 88 வதுவார்டு வட்ட செயலாளர் தாமோதரன், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி பங்கேற்றனர்.

Media: Tamil Sudar